

பிஎம்-கிசான் திட்ட மோசடி தொடர்பாக தகவல் அளிப்பவர்களுக்கு தகுந்த வெகுமதி அளிக்கப்படும் என சிபிசிஐடி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சிபிசிஐடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிஎம்-கிசான் திட்ட மோசடி தொடர்பாக சிபிசிஐடி பிரிவு போலீஸார்விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடி தொடர்பாக வெவ்வேறு மாவட்டங்களில் 13 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 52 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மோசடி குறித்து தகவல் அறிந்தோர், தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம். அவர்களின் ரகசியத்தன்மை பராமரிக்கப்படும். சரியான தகவல்கள் அளிப்பவர்களுக்கு தகுந்த வெகுமதி அளிக்கப்படும். தகவல்களை தொலைபேசி எண் 044-2851 3500, ஃபேக்ஸ் எண் 044-2851 2510, வாட்ஸ்அப் எண் 94981 81035, மின்னஞ்சல் cbcid2020@gmail.com மூலம் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.