Published : 19 Sep 2020 07:40 AM
Last Updated : 19 Sep 2020 07:40 AM

கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக தமிழகத்துக்கு ரூ.4,600 கோடி நிதி: நபார்டு வங்கி தலைவர் சிந்தாலா தகவல்

கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக, தமிழகத்துக்கு இந்தஆண்டு ரூ.4,600 கோடி நிதி வழங்கப்படும் என நபார்டு வங்கியின் தலைவர் சிந்தாலா தெரிவித்து உள்ளார்.

நபார்டு வங்கியின் தலைவராக பதவி ஏற்றுள்ள ஜி.ஆர்.சிந்தாலா, முதன்முறையாக சென்னை வந்துள்ளார். நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது,

‘‘வங்கிகளுக்கு கடன் வழங்குவது ரூ.4 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.8 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு தமிழகத்துக்கு கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.4,600 கோடி நிதிவழங்கப்படும். கரோனா ஊரடங்கு காலத்திலும், அரசின் சிறப்பான நடவடிக்கையால், 3.4 சதவீதம் அளவுக்கு விவசாய உற்பத்தி அதிகரித்தது. இதனால், விவசாயிகள் மிக
வும் மகிழ்ச்சியாக உள்ளனர். தென்மேற்கு பருவமழையும் இந்த ஆண்டு விவசாயிகளுக்கு நல்ல பயனை அளித்துள்ளது.

கடந்த ஆண்டு, தமிழகத்தில் விவசாய உள்கட்டமைப்புக்காக ரூ.16 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கப்பட்டது. கிராமப்புற வளர்ச்
சிக்காக, 2.7 சதவீத வட்டியில் கடன் வழங்குவது குறித்து முதல்வருடன் ஆலோசிக்கப்பட்டது.

கரூர், நாமக்கல் மாவட்டம் பயன் அடையும் வகையில், காவிரி நதியில் தடுப்பணை கட்ட, கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளின் நலனுக்காக தொடங்கப்பட்ட கிசான் திட்டத்தை தவறாகப் பயன்படுத்திய வர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது’’ என்றார்.

இச்சந்திப்பின்போது, தமிழ்நாடு மண்டல தலைமை பொதுமேலாளர் எஸ்.செல்வராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x