Published : 18 Sep 2020 01:15 PM
Last Updated : 18 Sep 2020 01:15 PM

மாவட்டம் உருவாகி 35 ஆண்டுகள் ஆகியும் வளர்ச்சிப்பாதைக்கு `வழி தெரியாத' திண்டுக்கல் மாவட்டம்

மதுரை மாவட்டத்தில் இருந்து பிரிந்து 1985-ம் ஆண்டு உருவானது திண்டுக்கல் மாவட்டம். முருகப் பெருமானின் மூன்றாம் படைவீடான பழநி புகழ்பெற்ற ஆன்மிகத் தலமாகவும், மலைகளின் இளவரசி கொ டைக்கானல் சிறந்த சுற்றுலாத் தலமாகவும், தொழில்கள் அதிகம் கொண்ட திண்டுக்கல், தொழில் நகரமாகவும், காய்கறிகள் அதிகம் உற்பத்தியாகும் ஒட்டன்சத்திரம் காய்கறி நகரமாகவும், பூக்கள் அதிகம் விலையும் நிலக்கோட்டை பூக்களின் நகரமாகவும், ஜவுளி நகரமாக வே டசந்தூரும் திகழ்வது திண்டுக்கல்லுக்கு சிறப்புச் சேர்த்து வருகின்றன.

இதில் கொடைக்கானல், பழநி, திண்டுக்கல் ஆகிய மூன்று நகரங்களும் திண்டுக்கல் மாவட்டத்தை வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகள் வரை தொடர்பை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால், இந்நகரங்களில் கட்ட மைப்பு வசதிகள் பின்தங்கிய நிலையில்தான் உள்ளன.

தொழில் வளர்ச்சி இல்லை

திண்டுக்கல்லில் சிறந்து விளங்கிய பூட்டுத் தொழில், இரும்புப் பெட்டி தயாரித்தல், தோல் தொழிற்சாலைகளின் நிலை இன்று கேள்விக்குறியாகவே உள்ளன. தோல் தொழிற் சாலைகள் பாதிக்கும் மேல் குறைந்துவிட்டன. புவிசார் குறியீடு பெற்றும் பூட்டுத்தொழில் சந்தைப்படுத்துதலில் சாதிக்க முடியவில்லை.

தொழில் வளர்ச்சியில் திண்டுக்கல் மாவட்டம் முன்னேற்றம் இல்லாமல் இருப்பது, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க இயலாத சூழலை உருவாக்கியுள்ளது. புதிய தொழில்களும் வரவில்லை. இதனால் திண்டுக்கல் மாவட்ட தொழிலாளர்கள் வேறு மாவட்டங்களுக்கு வேலைதேடிச் செல்கின்றனர்.

வேடசந்தூர் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க இடம் தேர்வு செய்ததோடு சரி, அதன்பின் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. இங்கு சிப்காட் அமைந்தால் பின்தங்கிய பகுதியில் வாழும் பலருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

நிலக்கோட்டைப் பகுதியில் மலர் சாகுபடி அதிகம் என்பதால் நறுமணத் (சென்ட்) தொழிற்சாலை அமைக்க வேண்டும் என அரசுக்கு பல ஆண்டுகளாக விடுத்த கோரிக்கை கிணற்றில் போட்ட கல்லாகவே உள்ளது.

சுற்றுலா மேம்பாடு என்பது திண்டுக்கல் மாவட்டத்தில் சுத்தமாக இல்லை. கொடைக்கானல், சிறுமலை உள்ளிட்ட மலைப் பிரதேசங்களில் பல திட்டங்கள் அரசுக்குப் பரிந்துரை செய்தும் நிதி ஒதுக்கீடு இன்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கொடைக்கானலின் பெரும் பிரச்சினையே வாகன நிறுத்துமிடம்தான். இதற்கான இடம் தேர்வு செய்தும் பணிகள் இதுவரை தொடங் கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் மலர் கண் காட்சியின்போது கொடைக்கானலில் பல அடுக்கு வாகனக் காப்பகம் அமைக்கப்படும் என்று அளிக்கப்படும் வாக்குறுதி காற்றோடு கலந்ததாகவே இருக்கிறது.

கிராமங்களில் குடிநீர் பிரச்சினை

ஆண்டுதோறும் கோடைகாலத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் குடிநீர்ப் பிரச்சினை ஏற்படுகிறது. இதற்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கிராமங்களுக்கான காவிரி குடிநீர் திட்டப் பணி விரிவாக்கம் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.

கிருபாகரன்

மாநகராட்சியின் பரிதாபநிலை

திண்டுக்கல் மாநகராட்சியின் நிதிநிலைமையோ பரிதாபம். ஊழியர் களுக்கு ஊதியம் வழங்கவே திணறும்நிலை உள்ளது. நகரில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண பேருந்துநிலையத்தை நகருக்கு வெளியே மாற்றும் திட்டம் ஆய்வுநிலையிலேயே உள்ளது. இது குறித்து திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தகர் சங்கத் தலைவர் கிருபாகரன் கூறுகையில், கடந்த 35 ஆண்டுகளில் மாவட்டத்தின் வளர்ச்சி போதுமானதாக இல்லை.

பூட்டு, இரும்புப்பெட்டி தொழில்கள் நசிந்துவிட்டன. இவற்றைக் காக்க எந்த நடவடிக்கையும் இல்லை. மதுரை - சென்னை தேஜஸ் ரயில்கூட திண்டுக்கல்லில் நின்று செல்வதில்லை.

மக்களுக்கான திட்டங்கள், இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பை உரு வாக்கும் திட்டங்களை செயல்பாட்டுக்குக் கொண்டு வர மாவட்ட நிர்வாகமும், அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x