சிவகங்கை தொகுதியின் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சந்திரன் மரணம்

சந்திரன்
சந்திரன்
Updated on
1 min read

சிவகங்கை அருகே தேவன்கோட்டையைச் சேர்ந்தவர் சந்திரன் (72). அதிமுகவைச் சேர்ந்த இவர் 2001-2006 வரை சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவராகவும், அதிமுக வடக்கு ஒன்றியச் செயலாளராகவும் இருந்தார்.

மூச்சுதிணறலால் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்திரன் நேற்று காலை இறந்தார். நுரையீரல் தொற்றால் இறந்ததாக மருத்துவத் துறையினர் தெரிவித்தனர். அவரது குடும்பத்தினருக்கு தமிழக கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் ஆறுதல் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in