

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் புரட்டாசி மாதமகாளய அமாவாசை விழாவை முன்னிட்டும், கரோனாதொற்று நீங்கவும், முன்னோர்கள் ஆன்மா சாந்தி அடையவும் நேற்று சிறப்பு வேள்வி பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்வையொட்டி எண்கோண வடிவ பெரிய யாககுண்டத்தில் பங்காரு அடிகளார் கற்பூரம் ஏற்றி வேள்வியை தொடங்கி வைத்தார். இந்த யாககுண்டத்தில் பக்தர்கள் நவதானியங்களையும், காய்கறி மற்றும் தானிய வகைகளையும் இட்டு அம்மனை வழிபட்டனர்.
இந்த வேள்விக்கு வருகை தந்த பக்தர்களுக்கு அரசின்விதிமுறைகளைப் பின்பற்றி சானிடைசர் மூலம் கைகளைசுத்தம் செய்து முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் வந்து செல்லஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தினர் அறிவுறுத்தினர். அதன்படியே பக்தர்கள் வேள்வியில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆதிபராசக்தி அறநிலையத்தின் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், ஆதிபராசக்தி மருத்துவமனை மேலாண்மை இயக்குநர் டி.ரமேஷ், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ், ஆதிபராசக்தி அறநிலைய அறங்காவலர் உமாதேவி ஜெய்கணேஷ், ஆதிபராசக்தி பாராமெடிக்கல் தாளாளர் ஸ்ரீலேகா செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.