Published : 18 Sep 2020 07:07 AM
Last Updated : 18 Sep 2020 07:07 AM

மகாளய அமாவாசையையொட்டி கோயில் குளங்களுக்கு வெளியே தர்ப்பணம் கொடுக்க சமூக இடைவெளியின்றி கூடிய மக்கள்

மகாளய அமாவாசையையொட்டி கோயில் குளங்களுக்கு வெளியே சமூகஇடைவெளியைப் பின்பற்றாமல் ஏராளமானோர் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

மகாளய அமாவாசை தினத்தன்று முன்னோருக்கு பலரும் நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். கரோனாபரவல் காரணமாக இந்து சமயஅறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்குளங்களில் தர்ப்பணம் கொடுக்க அனுமதி இல்லைஎன்று அறிவிக்கப்பட்டது.

இதனால், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்குளம் நேற்று பூட்டப்பட்டிருந்தது. இருப்பினும், நேற்று காலை 6 மணி முதலே ஏராளமானோர் தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்க வந்தனர். கோயில் குளத்துக்கு வெளியே ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் தர்ப்பணம் கொடுக்க காத்திருந்தனர். ஒருவர் பின் ஒருவர் அருகருகே அமர்ந்து தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில் குளம்,வடபழனி முருகன் கோயில்குளம் உள்ளிட்ட சென்னை,செங்கை, திருவள்ளூர், காஞ்சி மாவட்ட கோயில்குளங்களுக்கு வெளியே ஏராளமானோர் தர்ப்பணம்கொடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x