கிருஷ்ணகிரி வங்கியில் இருந்த நகைகளில் போலி அதிகம்?- கொள்ளையர்கள் தகவலால் போலீஸார் அதிர்ச்சி

கிருஷ்ணகிரி வங்கியில் இருந்த நகைகளில் போலி அதிகம்?- கொள்ளையர்கள் தகவலால் போலீஸார் அதிர்ச்சி
Updated on
2 min read

கிருஷ்ணகிரி வங்கி கொள்ளை வழக்கில் கைதான 4 பேரை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, கொள் ளையடித்த நகைகளை உருக்கும்போது அதில் போலி நகைகள் அதிகம் இருந்ததாகவும் இதுதொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் விசாரிக்குமாறு கொள்ளையர்கள் கூறியதால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி ராமாபுரம் பேங்க் ஆஃப் பரோடா வங்கி கிளையில் கடந்த ஜனவரி 23-ம் தேதி நள்ளிரவில் புகுந்த மர்ம கும்பல் ரூ.12 கோடி மதிப்புள்ள 6,038 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

இவ்வழக்கில் தனிப்படை போலீஸார் விசாரித்து உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஷா நவாஸ் (49) என்பவரை, கர்நாடக மாநிலத்தில் கைது செய்தனர். கடந்த மே மாதம் பாதாயுள் மாவட்டம் கம்ராயலம் கிராமத்தைச் சேர்ந்த அப்ரர் (27), ஷேக்அலிகான் (53) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

அதனை தொடர்ந்து டெல்லியில் கடந்த மாதம் 14-ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டம் கக்ராலா கிராமத்தைச் சேர்ந்த சாதிக்அலிகான் (32), ஃபஹீம்(எ)பாடா (29), யூசூப் (29) மற்றும் அஸார் அலி (36) ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க கேட்டு நீதிமன்றத்தில் போலீஸார் மனு தாக்கல் செய்தனர். போலீஸ் காவலில் 10 நாட்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதனைத் தொடர்ந்து டிஎஸ்பி சந்தான பாண்டியன் தலைமையிலான தனிப்படை போலீஸார் சாதிக்அலிகான் உள்ளிட்ட 4 பேரையும் கக்ராலா கிராமத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கொள் ளையர்கள் பதுக்கி வைத்திருந்த ரூ.38 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அனுமதிக்கப்பட்ட 10 நாளில் ஒரு நாள் முன்னதாகவே, 4 பேரையும் கிருஷ்ணகிரி ஜே.எம்.2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் 4 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

போலி தங்கம்?

இதுகுறித்து தனிப்படை போலீஸார் கூறும்போது, வங்கி கொள்ளை வழக்கில் கைதாகியுள்ள 4 பேரும், பல்வேறு மாநிலங்களில் வங்கி கொள்ளையில் ஈடு பட்டுள்ளனர். ஆனால் அந்த வழக்கு களில் அவர்கள் சிக்கவில்லை. கிருஷ்ண கிரி வங்கி கொள்ளையில் பிடிபட்டுள்ளனர். இங்கு கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தை உருக்கும்போது, போலி நகைகள் அதிகம் இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர். இதுதொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என கைதானவர்கள் கூறினர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தோம் என்றனர்.

இதுகுறித்து டிஎஸ்பி சந்தானபாண்டிய னிடம் கேட்டபோது, கொள்ளையர்கள் முன்னுக்குப் பின் முரணாக கூறுகின்ற னர். மொழி பிரச்சினை இருந்தாலும், மிகுந்த சிரமத்துக்கு இடையே வங்கி கொள்ளையில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்து உள்ளோம். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள 4 பேரை தொடர்ந்து தேடி வருகிறோம். இதுவரை சுமார் ரூ.1 கோடியே 8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைபற்றப்பட்ட பணம் முழுவதும் நீதிமன்றத்தில் ஒப்படைக் கப்பட்டுள்ளது. 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள் ளனர். நகைகளை இழந்த வாடிக்கை யாளர்களுக்கு இழப்பீடு வழங்க வங்கி அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர் என்றார்.

இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, வாடிக்கையாளர்கள் நகை களை அடகு வைக்கும்போது வங்கியில் தீவிர சோதனைக்கு பின்னரே நகைகள் பெறப்படுகின்றன. எனவே, இதில் போலி நகைகள் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in