மதுரையில் திருநங்கை பாரதி கண்ணம்மா சுயேட்சை வேட்பாளராக போட்டி

மதுரையில் திருநங்கை பாரதி கண்ணம்மா சுயேட்சை வேட்பாளராக போட்டி
Updated on
1 min read

மதுரை நாடாளுமன்ற தேர்தலில் திருநங்கையான பாரதி கண்ணம்மா சுயேட்சை வேட்பாளராக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

எம்.பி தேர்தலில் போட்டியிடும் முதல் திருநங்கை வேட்பாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரையை சேர்ந்த பாரதி கண்ணம்மா (53) நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவு எடுத்துள்ளார். இவர்தான் இந்தியாவிலேயே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முதல் திருநங்கை என்று கூறப்படுகிறது. பாரதி கண்ணம்மா, மதுரை தியாகராஜர் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை முடித்து, மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் சமூகவியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இது தவிர கணினி அறிவியலில் டிப்ளமோவும் பெற்றுள்ளார்.

மதுரையில் 2011-ல் மேயர் பதவிக்காக போட்டியிட முயன்ற போது சரியான ஆவணங்கள் இல்லாததால் அவரால் போட்டியிட முடியவில்லை. அப்போது அவரது வாக்காளர் அட்டையில் ஆண் என்றும் வேட்பு மனுவில் திருநங்கை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது அனைத்து ஆவணங்களையும் திருநங்கை (other) என்று முறையாகப் பெற்று சுயேச்சையாக நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை தொகுதியில் நிற்க வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in