பகுத்தறிவையும் சமூக நீதியையும் கொண்டு தமிழகத்தின் சிந்தனைப் பாதையை சீர்திருத்தியவர் பெரியார்; கமல் புகழஞ்சலி

கமல்ஹாசன்: கோப்புப்படம்
கமல்ஹாசன்: கோப்புப்படம்
Updated on
1 min read

பகுத்தறிவையும் சமூக நீதியையும் கொண்டு தமிழகத்தின் சிந்தனைப் பாதையை சீர்திருத்தியவர் பெரியார் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பெரியாரின் 142-வது பிறந்த நாள் இன்று (செப். 17) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பெரியாரை நினைவுகூர்ந்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் பலர் பெரியார் குறித்து பதிவிட்டு வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், தன் முகநூல் பக்கத்தில், பெரியார் ஊட்டிய சமூகநீதி - சமத்துவம் - சாதியொழிப்பு - பெண்ணுரிமை போன்ற தத்துவங்களுக்காக நம்மை ஒப்படைத்துக் கொள்வோம் என, மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு தன் ட்விட்டர் பக்கத்தில், "பகுத்தறிவையும் சமூக நீதியையும் கொண்டு தமிழகத்தின் சிந்தனைப் பாதையை சீர்திருத்தியவர்! புரட்சியின் வித்தாய் விளைந்து, இச்சமூகத்தின் மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் காரணியாய் கனிந்தவர்! 'பெரியாருக்கு முன்', 'பெரியாருக்குப் பின்' என தமிழர்கள் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர்" என பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in