

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குஉள்ள கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகள் நிரம்பி, 2 அணைகளுக்கும் வரும் நீர் முழுவதும் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதையடுத்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துஉள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 8,622 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 12,894 கனஅடியாக அதிகரித்தது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 92 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 91.78 அடியானது. நீர் இருப்பு 54.70 டிஎம்சி-யாக உள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடி என்ற அளவுக்கு தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. இந்நிலையில், நேற்று மாலை விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடி என்ற அளவில் தண்ணீர் வந்தது.