

மகாளய அமாவாசை இன்று (வியாழக்கிழமை) வருகிறது. இந்த நாளில் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப காவிரிக் கரையில் ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம் கொடுப்பார்கள்.
இந்த ஆண்டு கரோனா தடுப்பு நடவடிக்கையாக, அம்மா மண்டபத்தில் மகாளய அமாவாசை நாளான இன்று(செப்.17) மக்கள் கூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதையடுத்து, நேற்று காலை முதலே ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அம்மா மண்டபம் காவிரிக் கரையில் திரண்டனர். காவிரி ஆற்றில் குளித்துவிட்டு, அம்மா மண்டபத்தில் தர்ப்பணம் கொடுத்தனர்.
அமாவாசை நேற்று இரவு 7.20 மணி தொடங்கி இன்று மாலை 5.30 மணி வரை இருப்பதால் பலர் நேற்றே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.