சைபர் கிரைம் புகார் விவகாரம்: டிஜிபி விளக்கம் அளிக்க வேண்டும் - மனித உரிமை ஆணையம் உத்தரவு

சைபர் கிரைம் புகார் விவகாரம்: டிஜிபி விளக்கம் அளிக்க வேண்டும் - மனித உரிமை ஆணையம் உத்தரவு

Published on

தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சைபர் கிரைம் போன்ற நட வடிக்கைக்குரிய குற்றங்கள் தொடர் பான புகார்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யாமல் இருப்பது மனித உரிமை மீறலும், சட்டத்தை முடக் கும் நடவடிக்கையும் ஆகும். இது போன்ற புகார்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யாமல் சாதாரண புகார் களுக்கு வழங்கப்படுவதுபோல் பதிவு அத்தாட்சி (சிஎஸ்ஆர்) மட்டும் தமிழக போலீஸாரால் வழங் கப்படுவதாக ஆணையத்துக்கு புகார் வந்துள்ளது. இதன் காரண மாக தமிழகத்தில் சைபர் கிரைம் வழக்குகளின் எண்ணிக்கை மிக வும் குறைவாக பதிவாகியுள்ள தாக அந்த புகாரில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்தியாவில் 69 சதவீதம் அளவுக்கு சைபர் கிரைம் வழக்குகள் அதிகரித்துள்ளன. ஆனாலும் தமிழகத்தில் இந்த எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதற்கு புகார்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யாமல் இருப்பதுதான் காரணம். இது தொடர்பாக ஊடகங் களில் வெளியான செய்திகளை யும், தேசிய குற்றப் பதிவேடு காப் பகத்தின் புள்ளிவிபரங்களையும் ஆதாரமாக இணைத்து ஆணையத் துக்கு புகார் வந்துள்ளது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் குறித்து 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு தமிழக டிஜிபிக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in