Published : 25 Sep 2015 08:31 AM
Last Updated : 25 Sep 2015 08:31 AM

வத்தலகுண்டு நகைக்கடன் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் மதிப்பு நகை கொள்ளை: ஊழியர்களை கட்டிப்போட்டு முகமூடி கொள்ளையர்கள் துணிகரம்

திண்டுக்கல் மாவட்டம், வத்தல குண்டு மணப்புரம் தங்க நகைக் கடன் நிறுவனத்தில் முகமூடி கொள் ளையர்கள் புகுந்து ஊழியர்களை கட்டிப்போட்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, ரூ.17 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றனர்.

வத்தலகுண்டு பிரதான சாலை யில் பெரிய பள்ளிவாசல் அருகே வணிக வளாக மாடியில் மணப்புரம் தங்க நகைக்கடன் நிறுவனம் செயல்படுகிறது. இதில் மேலாளர் சுகன்யா, உதவி மேலாளர் சரண்யா, வங்கி ஊழியர்கள் மூர்த்தி, சங்கிலிப்பாண்டி, வினோத் கண்ணா மற்றும் காவ லாளி பெருமாள் ஆகியோர் பணிபுரிகின்றனர். நேற்று காலை 8.30 மணியளவில் மேலாளர் சுகன்யா மற்றும் ஊழியர்கள் அலு வலகத்தை திறந்து பணிகளை தொடங்கினர். அப்போது 8.55 மணிக்கு 6 மர்மநபர்கள் முகமூடி அணிந்து கத்தியுடன் நுழைந்துள்ள னர். அவர்கள் வந்தவேகத்தில் அலுவலக வாசலில் நின்றிருந்த காவலாளி பெருமாள் வாயை மூடி உள்ளே இழுத்துச் சென்றனர். இதை பார்த்த மற்ற ஊழியர்கள் கூச்சல் போட்டனர். உடனே கொள்ளையர்கள், அவர்களை சத்தம் போட்டால் குத்திவிடுவதாக மிரட்டி ஒரு அறையில் அடைத்தனர். அவர்களின் வாயில் பிளாஸ்டிக் டேப்பை கொண்டு ஒட்டினர். கைகால்களையும் கயிற்றால் கட்டினர்.

பின்னர் கத்திமுனையில் மேலா ளர் சுகன்யாவிடம் வங்கி லாக்கர் சாவியை வாங்கி, உதவி மேலாளர் சரண்யாவை லாக்கர் அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்த இரு பீரோக்களில் பல கோடி ரூபாய் நகைகள், லட்சக்கணக்கில் பணம் இருந்துள்ளன. அதில் ஒரு பீரோவில் இருந்த நகை, பணத்தை மட்டும் எடுத்து தாங்கள் கொண்டுவந்த பைகளில் நிரப்பி னர். அவற்றைக் கொள்ளையடித் ததும், அவர்கள் மாடிப்படி வழியாக வெளியேறி தப்பினர்.

இதைத் தொடர்ந்து நிறுவன ஏஜென்ட் பரணிதரன் அலுவல கத்துக்குள் நுழைந்துள்ளார். அவர் ஊழியர்களை தேடியபோது அங்குள்ள அறையில் அனைவரும் வாய், கை, கால்கள் கட்டப்பட் டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி யடைந்தார். அவர்களுடைய கை, கால்களை அவர் அவிழ்த்து விட்டுள்ளார்.

தகவல் அறிந்த டி.ஐ.ஜி. அறிவுச்செல்வம், எஸ்.பி. சரவணன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் லிண்டா வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. மோப்ப நாய் ஊருகாலச் சாமி கோயில் தெருவில் போய் நின்றது. கொள்ளை சம்பவத்தையொட்டி, அப்பகுதி யில் உடனடியாக 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டனர். இந்த சம்பவத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், ரூ.17 லட்சம் ரொக்கம் கொள்ளை போனதாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. சரவணன் கூறியது: கொள்ளைபோன நகைகள் விவரம் இன்னமும் ஊழியர்களுக்கே தெரியவில்லை. ரூ.17 லட்சம் பணம் கொள்ளை போய் உள்ளது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இரு பீரோக்களில் ஒரு பீரோவின் சாவி கோவை நிறுவனத்தில் இருந்ததால் அதிலிருந்த இருந்த நகை, பணம் தப்பியது என்றார்.

சைகை மூலம் உத்தரவிட்ட கொள்ளையர்

கொள்ளை நடந்த மணப்புரம் நிறுவனத்தில் சிசி டிவி கண்காணிப்பு கேமரா, லாக்கர் அறையில் அலாரம் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் உள்ளன. உள்ளே நுழைந்ததும் கொள்ளையர்களில் ஒருவர் கண்காணிப்பு கேமராவை உடைக்க முயன்றார். அதில் அவரது கையில் கண்ணாடி கிழித்து காயம் ஏற்பட்டுள்ளது. அதனால், கேமராக்களை உடைக்காமல் விட்டுள்ளனர். வங்கி லாக்கரை உடைத்தபோது அலாரம் ஒலித்தது. கொள்ளையர்கள் அதனை உடனடியாக செயலிழக்கச் செய்ததால் அலாரம் தொடர்ந்து ஒலிக்கவில்லை. அதனால், உள்ளே என்ன நடக்கிறது என வெளியே உள்ளவர்களுக்கு தெரியாமலேயே 15 நிமிடத்தில் கொள்ளை சம்பவத்தை முடித்துள்ளனர். சம்பவம் நடந்தபோது கொள்ளையர் யாரும் பேசவில்லை. சைகை மொழியிலேயே ஊழியர்களுக்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.

நேற்று பக்ரீத் பண்டிகை என்பதால் கொள்ளை சம்பவம் நடந்த மணப்புரம் அலுவலகத்தின் கீழ் பகுதி சாலையில் ஏராளமான ரோந்து போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கொள்ளை யர்கள் அவர்களை கடந்துதான் கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளனர். போலீஸாருக்கு அவர்கள் மீது சிறிதும் சந்தேகம் வரவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x