மகாமக விழா ஏற்பாடுகள் தீவிரம்

மகாமக விழா ஏற்பாடுகள் தீவிரம்
Updated on
1 min read

கும்பகோணத்தில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மகாமகத் திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்துவருவதாக அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது கும்பகோணம் தொகுதி திமுக உறுப்பினர் ஜி.அன்பழகன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் காமராஜ் கூறியதாவது: கும்பகோணத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவுள்ள மகாமகத் திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத் துறையில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான தற்காலிக பணியாளர்கள் பணி வரன்முறை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in