Published : 16 Sep 2020 07:12 AM
Last Updated : 16 Sep 2020 07:12 AM

இனிமேல் வாங்கப்படும் அரசு பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு வசதிகள்: நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம்

இனிவரும் காலங்களில் அரசுப் பேருந்துகள் வாங்கும்போது மாற்றுத் திறனாளிகள் எளிதில் ஏறி இறங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.

மாற்றுத் திறனாளிகளின் நலன் காக்கும் வகையில் கல்வி நிறு வனங்கள், அரசு கட்டிடங்கள், ரயில், பேருந்து போக்குவரத்து களில் தேவையான வசதிகளை செய்துதரக் கோரி உயர் நீதிமன்றத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. அந்தவழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மாற்றுத் திறனாளிக ளுக்கு தேவையான வசதியை செய்து கொடுக்க அறிவுறுத்தி,அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந் தது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ‘‘மாற்றுத்திற னாளிகளின் நலன் காக்கும் வகையில் பல்வேறு உத் தரவுகளை உயர் நீதிமன்றம் பிறப்பித்தும் இதுவரை அவற்றை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. ஆயிரக்கணக்கான அரசு பேருந்து கள் கொள்முதல் செய்யப்பட்டும், மாற்றுத் திறனாளிகள் எளிதில் ஏறி, இறங்கும் வகையில் அதில் வசதிகள் செய்யப்படவில்லை’’ என குற்றம்சாட்டப்பட்டது.

அப்போது தமிழக அரசு தரப் பில், ‘‘இனிமேல் கொள்முதல் செய்யப்படும் 50 அரசு பேருந்துகளில் 10 பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறி, இறங்கும் வகையில் படிகள் அமைக்கப்படும்’’ என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்து அனைத்து துறைஅதிகாரிகளும் அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவிட்டு, வழக்கைஅக்.12-க்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x