திருமூர்த்தி அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் பழனிசாமி உத்தரவு

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்
முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்
Updated on
1 min read

திருமூர்த்தி அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்.15) வெளியிட்ட அறிக்கை:

"திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பூசாரிநாயக்கன் ஏரிப் பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீர் திறந்துவிடக் கோரி, உடுமலைப்பேட்டை வட்டம், ஆலாம்பாளையம் கிராமம் பூசாரிநாயக்கன் ஏரிப் பாசன விவசாயிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

விவசாயிகளின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், ஆலாம்பாளையம் கிராமம், பூசாரிநாயக்கன் ஏரிப் பாசனத்திற்குத் திருமூர்த்தி அணையிலிருந்து 39.87 மி.கன அடிக்கு மிகாமல் நாளை (செப். 16) முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள 88.56 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in