

‘திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை சம்பந்தமான ஆதாரம் வெளியிடப்படும்’ என பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வரும் யுவராஜின் பேச்சு, வாட்ஸ்-அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். இவர் கடந்த ஜூலை 24-ம் தேதி பள்ளிபாளையம் அருகே கிழக்கு தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த வழக்கு தொடர்பாக 13 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், யுவராஜ், போலீஸாரின் நடவடிக் கையை விமர்சித்து பேசிய பேச்சு வாட்ஸ்-அப் மூலம் இரு முறை பரவவிடப்பட்டது.
அதில், போலீஸார் ஒரு தலை பட்சமாக நடவடிக்கை மேற்கொள் வதாக யுவராஜ் குற்றம்சாட்டி யிருந்தார். இந்நிலையில், அந்த வழக்கின் விசாரணை அதிகாரி யான திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா கடந்த 18-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்படும் யுவராஜ், டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணம் தொடர்பாக பேசிய பேச்சு வாட்ஸ்-அப்பில் வெளியிடப்பட் டுள்ளது. அதில், காவல்துறை உயர் அதிகாரிகளை கண்டித்து பேசியது டன், டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை சம்பந்தமாக முக்கிய ஆதாரங்களை வெளியிடப்போவ தாகவும் குறிப்பிட்டுள்ளார். யுவ ராஜின் பேச்சு வாட்ஸ்-அப்பில் அடிக்கடி வெளியாவது, காவல் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
யுவராஜின் பேச்சு வாட்ஸ்-அப்பில் அடிக்கடி வெளியாவது, காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.