

ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வைத்த பேனரால் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டன.
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு கலைக் கல்லூரி தொடங்கப்படும் என தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.
இக்கல்லூரியை அமைக்க தொடர் முயற்சி எடுத்த அதிமுக எம்எல்ஏ சந்திரபிரபாவுக்கு திமுக கூட்டணியில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நன்றி தெரிவித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
அதில், வில்லிபுத்தூரில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படுவது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத் துக்குக் கிடைத்த வெற்றி. இக்கல்லூரி அமையத் தொடர்ந்து முயற்சி செய்த சந்திரபிரபா எம்எல்ஏவுக்கு நன்றி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பேனரால், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.