

குன்னூரில் குப்பை மேலாண்மை பகுதி, பூங்காவாக மாற்றப் பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளிலுள்ள 30 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை மற்றும் கழிவுகள், நகராட்சிக்கு உட்பட்ட ஓட்டுப்பட்டரை வசம்பள்ளம் பகுதியில் உள்ள குப்பை தளத்தில் கொட்டப்படுகிறது. இங்கு துர்நாற்றம் வீசுவதால், இந்த இடத்தின் ஒரு பகுதியை தூய்மைப்படுத்தி பூங்கா அமைக்க தன்னார்வ அமைப்பினர் திட்டமிட்டிருந்தனர்.
இதன்பேரில் அந்தப் பகுதி முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டு 50-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான வண்ணங்களில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மலர்கள் நடவு செய்யப்பட்டு, தற்போது புதிய பூங்காவாக மாற்றப்பட்டு, குப்பை மேலாண்மை பூங்கா என்று அழைக்கப்படுகிறது. இதுகுறித்து தன்னார் வலர்கள் கூறும்போது, ‘‘குப்பைகொட்டப்படும் இடத்திலும் சூழல் காக்கப்படவேண்டும் என்றநோக்கில் பூங்கா அமைக்கப்பட்டது. குப்பை கொட்டும் தளத்தை அருவருப்பாக பார்த்து வந்தநிலையில், பூத்துக்குலுங்கும் மலர்ச் செடிகளால் மக்கள் ரசிக்கும் இடமாக பூங்கா மாறியுள்ளது’’ என்றனர்.