

மாமல்லபுரத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், வரலாற்றுச் சின்னங்களை பார்வையிட அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு, சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரம் வரத் தொடங்கிவிட்டனர். ஆனாலும் கடற்கரை தவிர, கடற்கரை கோயில், ஐந்து ரதம் போன்றவை மூடப்பட்டு சுற்றுலாப் பயணிகள் சென்று பார்க்க அனுமதியில்லாமல் இருக்கிறது. இதனால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் இவர்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது,‘‘சுற்றுலாப் பயணிகள் சிலர் முகக்கவசம் இல்லாமல் வருவதை காவல் துறையினர் கண்காணிக்க வேண்டும். அதேபோல் தனிமனித இடைவெளியை பின்பற்றி வரலாற்றுச் சின்னங்களை பார்வையிட அனுமதிக்க வேண்டும்”என்று வலியுறுத்துகின்றனர்.