

கரோனா பரவாமல் தடுக்க, அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பெட்ரோல் விற்பனையாளர்கள் கடைபிடித்து வருகின்றனர்.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன. நகர்புறம் மற்றும் கிராமப் புறங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே இயங்கி வருகின்றது.
இதற்கிடையே பெட்ரோல் பங்குகளை வரும் 30-ம் தேதி வரை இரவு 10 மணி வரை செயல்பட அரசு அனுமதி அளித்து உள்ளது.
இந்நிலையில் நகர்ப்புற, கிராமப்புற பெட்ரோல் பங்குகளை 24 மணி நேரமும் திறக்க அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர் சங்கம் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.