2 மேம்பாலங்கள் செப்.17-ல் திறப்பு: செங்கை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

சென்னை பல்லாவரம் மற்றும் தாம்பரத்தையடுத்த வண்டலூர் பாலங்களை செப்.17-ம் தேதி முதல்வர் பழனிசாமி திறந்து வைக்கிறார். இதையொட்டி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், எஸ்பி. கண்ணன் உள்ளிட்டோர் வண்டலூர் பாலத்தை நேற்று ஆய்வு செய்தனர்.படம்: எம்.முத்துகணேஷ்

Updated on
1 min read

வண்டலூர் மற்றும் பல்லாவரம்பகுதி ஜிஎஸ்டி சாலையில் கட்டப்பட்டுள்ள 2 மேம்பாலங்களை, வரும் 17-ம் தேதி முதல்வர் திறக்கஉள்ளார். இதையடுத்து, ஆட்சியர் ஜான் லூயிஸ் அவற்றை நேற்று ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் உயிரியல் பூங்கா சந்திப்பு அருகே தேசிய நெடுஞ்சாலையில் ரூ.55 கோடியில் 6 வழிப் பாதை கொண்ட உயர்நிலை மேம்பாலம் மற்றும் பல்லாவரத்தில் ஜிஎஸ்டி சாலை, சந்தை சாலை, குன்றத்தூர் சாலை சந்திப்புகளை இணைத்து ரூ.82 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலத்தை வரும் 17-ம் தேதி முதல்வர் பழனிசாமி திறந்து வைக்க உள்ளார்.

இந்த மேம்பாலங்களின் பணிகளை செங்கல்பட்டு ஆட்சியர் ஜான்லூயிஸ் நேற்று ஆய்வு செய்தார்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முதல்வருக்கு கோரிக்கை

இதற்கிடையே பல்லாவரம் பாலத்துக்கு மறைமலை அடிகளாரின் பெயரை வைக்க வேண்டும் என்று அவருடைய குடும்பத்தினர் மற்றும் திமுகவினரும், ஜெயலலிதாவின் பெயரை வைக்கவேண்டும் என்று அதிமுகவினரும் முதல்வருக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in