Published : 27 Sep 2015 12:47 PM
Last Updated : 27 Sep 2015 12:47 PM

மகாமக திருவிழா நகரமான கும்பகோணத்தை தென் பாரதத்தின் கும்ப நகரமாக அறிவிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு சுவாமி ராமானந்தா கோரிக்கை

மகாமக திருவிழா நகரமான கும்பகோணத்தை தென் பாரதத்தின் கும்ப நகரமாக அறிவிக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை வைக்க வேண்டும் என அகில பாரத துறவிகள் சங்கத்தின் அமைப்புச் செயலாளர் சுவாமி ராமானந்தா தெரிவித்துள்ளார்.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் கும்பகோணம் மகாமக திருவிழா, அடுத்த ஆண்டு பிப்ரவரி 22-ல் நடைபெறுகிறது. இதற்காக அரசின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், மகாமக திருவிழாவையொட்டி, கும்பகோணத்தில் அகில பாரத துறவிகள் மாநாடு பிப்ரவரி 18 தொடங்கி 3 நாட்கள் நடைபெறு கிறது. இந்த மாநாட்டில், கும்ப கோணத்தை கும்ப நகராக அறி விக்கக் கோருவது உள்ளிட்ட முக் கியத் தீர்மானங்கள் நிறைவேற் றப்பட உள்ளன.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய அகில பாரத துறவிகள் சங்கத்தின் அமைப்புச் செயலாள ரும் துறவிகள் மாநாட்டின் ஒருங் கிணைப்பாளருமான சுவாமி ராமானந்தா, “ஹரித்துவார், அலகாபாத், நாசிக், உஜ்ஜைன் ஆகியவற்றை மத்திய அரசு கும்ப நகரங்களாக அறிவித்திருக்கிறது. அவற்றைவிட புனிதமானது கும்ப கோணம். கங்கை, யமுனை, சரஸ் வதி, சிந்து, நர்மதை, காவிரி ஆகிய 7 புண்ணிய நதிகளும் 4 கும்ப தேவதைகளும் சங்கமிக்கும் இடமாக கும்பகோணம் உள்ளது. எனவே இதன் புனிதத்தை போற்றும் வகையில் கும்பகோணத்தை மத்திய அரசு தென் பாரதத்தின் கும்ப நகரமாக அறிவிக்க வேண் டும். இப்படி அறிவித்தால் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நகரங்கள் பட்டியலில் கும்பகோணமும் இடம் பிடிக்கும்.

கும்ப நகரங்களின் அடிப்படை வசதிகளுக்காக மத்திய அரசு ஆயி ரக்கணக்கான கோடிகளை ஒதுக்கி வருகிறது. அண்மையில்கூட கங் கையை தூய்மைப்படுத்த ரூ.22,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கும்ப நகரமாக அறிவிக்கப்பட்டால் கும்ப கோணத்துக்கும் அதுபோல நிதி கிடைக்கும். அதன்மூலம் நகரின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப் படும்.

இந்த கோரிக்கைக்கு வலு சேர்க் கும் வகையில் தமிழக அரசு, உள்ளூர் விழாவாகக் கொண்டாடப்படும் மகாமக திருவிழாவை தென் பாரத கும்ப மேளா என பிரகடனம் செய்து, கும்பகோணத்தை கும்ப நகரமாக அறிவிக்கக் கோரி மத்திய அரசுக்குக் கடிதம் எழுத வேண்டும்” என்றார்.

மேலும், துறவிகள் மாநாடு குறித் துப் பேசுகையில், “தமிழகத்தில் முதல்முறையாக அகில பாரத துறவிகள் மாநாடு நடத்தப்படுகி றது. இதில் நாடு முழுவதுமிருந்து சுமார் 1000 துறவிகள் கலந்து கொள்கிறார்கள். உலக அளவிலும் துறவிகளை வரவைப்பதற்கு யோகா குரு   ரவிசங்கர் முயற்சி எடுத்து வருகிறார். துறவிகளை ஒருங்கிணைப்பதற்காக ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். ஏதோ துறவி கள் கூடினார்கள், கலைந்தார்கள் என்றில்லாமல், தேச நலன் சார்ந்த முக்கியப் பிரச்சினைகளை இந்த மாநாட்டில் விவாதிக்கத் தீர்மானித் திருக்கிறோம்.

நதிகளை தேசியமயமாக்கவும் நதிகள் இணைப்புக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கக் கோரியும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படும். சமயம் சார்ந்த சிந்தனைகள், சமு தாய பிரச்சினைகள், தேசிய முக்கி யத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் துறவியர்களின் பங்கு, உலக அளவில் உள்ள இந்துக்களுக்கு துறவிகள் எப்படி எல்லாம் உதவிக் கரம் நீட்டமுடியும், சாதி, இன, மொழி மோதல்களை தடுப்பதில் துறவிகளின் செயல்பாடு, சமுதாய மேம்பாடு, சமுதாய ஒருங்கிணைப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் மாநாட்டில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடத்தப்படும்” என்று சுவாமி ராமானந்தா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x