Published : 13 Sep 2020 06:43 PM
Last Updated : 13 Sep 2020 06:43 PM

செப்.13 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 13) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,02,759 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 3,271 3,007 227 37
2 செங்கல்பட்டு 30,366

27,898

1,987 481
3 சென்னை 1,48,584 1,35,215 10,393 2,976
4 கோயம்புத்தூர் 22,156 18,308 3,495 353
5 கடலூர் 16,275 13,135 2,966 174
6 தருமபுரி 2,029 1,312 697 20
7 திண்டுக்கல் 7,863 6,951 762 150
8 ஈரோடு 4,534 3,432 1,043 59
9 கள்ளக்குறிச்சி 7,888 6,891 910 87
10 காஞ்சிபுரம் 19,425 17,863 1,273 289
11 கன்னியாகுமரி 10,958 10,015 736 207
12 கரூர் 2,161 1,732 397 32
13 கிருஷ்ணகிரி 3,174 2,272 858 44
14 மதுரை 15,310 14,043 892 375
15 நாகப்பட்டினம் 4,075 2,872 1,136 67
16 நாமக்கல் 3,344 2,382 912 50
17 நீலகிரி 2,349 1,783 549 17
18 பெரம்பலூர் 1,545 1,414 112 19
19 புதுகோட்டை 7,427 6,520 786 121
20 ராமநாதபுரம் 5,181 4,824 244 113
21 ராணிப்பேட்டை 12,093 11,258 690 145
22 சேலம் 14,475 12,265 1,982 228
23 சிவகங்கை 4,521 4,171 236 114
24 தென்காசி 6,260 5,591 553 116
25 தஞ்சாவூர் 8,340 7,335 877 128
26 தேனி 13,775 12,832 786 157
27 திருப்பத்தூர் 3,701 3,136 492 73
28 திருவள்ளூர் 28,325 25,762 2,087 476
29 திருவண்ணாமலை 13,071 11,338 1,539 194
30 திருவாரூர் 5,267 4,502 700 65
31 தூத்துக்குடி 12,300 11,500 681 119
32 திருநெல்வேலி 11,131 9,866 1,072 193
33 திருப்பூர் 4,748 2,946 1,717 85
34 திருச்சி 8,846 7,822 891 133
35 வேலூர் 12,629 11,503 932 194
36 விழுப்புரம் 9,441 8,474 880 87
37 விருதுநகர் 13,683 13,045 436 202
38 விமான நிலையத்தில் தனிமை 922 905 16 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 888 820 68 0
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0
மொத்த எண்ணிக்கை 5,02,759 4,47,366 47,012 8,381

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x