கொடைக்கானல் மலைப் பகுதியில் விதைப்பந்துகள் வீசிய சகோதரிகள்

கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே சகோதரிகள் இருவர் விதைப் பந்துகள் வீசும் நிகழ்வைத் தொடங்கிவைத்தார் டி.எஸ்.பி. ஆத்மநாதன்.
கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே சகோதரிகள் இருவர் விதைப் பந்துகள் வீசும் நிகழ்வைத் தொடங்கிவைத்தார் டி.எஸ்.பி. ஆத்மநாதன்.
Updated on
1 min read

கொடைக்கானல் மலைப் பகுதியில் இயற்கையை பாதுகாக்கும் விதமாக மலைச்சாலையின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான விதைப் பந்துகளை சகோதரிகள் வீசினர்.

கொடைக்கானலைச் சேர்ந்த யூஜின் அசோக் என்பவரது மகள்கள் சுபகீதா(16), சுஜிதா(14). கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் சுபகீதா 11-ம் வகுப்பும், சுஜிதா ஒன்பதாம் வகுப்பும் படித்து வருகின்றனர். பள்ளிகள் திறப்பு இல்லாததால் ஆன்லைன் மூலம் வகுப்புக்கான நேரம் போக மீதமுள்ள நேரத்தை பயனுள்ளதாக கழிக்க விரும்பி கடந்த ஒரு மாதமாக ஒரு லட்சம் விதைப்பந்துகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இப்பணி முடிந்ததால், முதற்கட்டமாக கொடைக்கானல் மலைப்பகுதியான பாம்பார்புரம், வட்டக்கானல் பகுதிகளில் 20 ஆயிரம் விதைப்பந்துகள் தூவப்பட்டன.

இரண்டாம் கட்டமாக வெள்ளி நீர்வீழ்ச்சி தொடங்கி பெருமாள் மலை, அடுக்கம் மலைச்சாலை வழியாக கும்பக்கரை வரை விதைப்பந்துகள் வீசும் நிகழ்ச்சி தொடங்கியது. கொடைக்கானல் டி.எஸ்.பி.ஆத்மநாதன் இதைத் தொடங்கி வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in