திறக்குறளை காதலிக்கும் ஓய்வுபெற்ற வட்டாட்சியர்: 87 வயதிலும் இளைஞர்களுக்கு கற்பிக்கிறார்

ஜவஹர்லால்
ஜவஹர்லால்
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், மானா மதுரையில் 87 வயதிலும் ஓய்வு பெற்ற வட்டாட்சியர் ஒருவர் திருக்குறளை மனப்பாடமாக ஒப்பிக்கிறார். மேலும் இளைஞர் களுக்கும் கற்பித்து வருகிறார்.

மானாமதுரை பூக்காரத் தெரு வைச் சேர்ந்தவர் ஜவஹர்லால் (87). ஓய்வுபெற்ற வட்டாட்சியர். இவர், திருக்குறள் மீது தீராத காதல் கொண்டவர். பணிக் காலத்திலேயே எப்போதும் கையில் திருக்குறள் புத்தகத்தை வைத்து வாசித்துக் கொண்டிருப்பார். ஓய்வுபெற்ற பிறகும் திருக்குறள் மீதான ஆர்வம் குறையவில்லை. இப்போதும் குறட்பாக்களை மனப்பாடமாக ஒப்பிக்கிறார். எந்த அதிகாரத்தில் இருந்து எந்தவொரு குறளைக் கேட்டாலும் மனப்பாடமாகச் சொல்கிறார்.

அவரது வீட்டின் அருகேயுள்ள இளைஞர்களை திருக்குறள் படிக்கும்படி வலியுறுத்துவதோடு சொல்லியும் தருகிறார். இதுபற்றி கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இவரது மனைவி 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், தனது மகன் குடும்பத்தாரோடு வசித்தாலும், தள்ளாத வயதிலும் தனது தேவைகளை தானே செய்து கொள்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in