Published : 13 Sep 2020 01:22 PM
Last Updated : 13 Sep 2020 01:22 PM

கரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் ‘வாட்ஸ் ஆப்’ வழியாக கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள்

கரோனா ஊரடங்கால் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில், மதுரை யா.ஒத்தக்கடை அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் வாட்ஸ் ஆப் குழு வழியாக மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வருகின்றனர்.

யா.ஒத்தக்கடையில் யானைமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி. தனியார் பள்ளிக்கு இணையான வசதி மற்றும் கற்பித்தல் திறனால் இப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை எப்போதும் அதிகமாக இருக்கும்.

நடப்புக் கல்வியாண்டில் மதுரையில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளில் படித்து வந்த மாணவர்கள் அப்பள்ளிகளில் இருந்து விலகி இப்பள்ளியில் சேர்ந்து வருகின்றனர்.

தற்போது கரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாத நிலை யில், ஏற்கெனவே படித்து வரும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக ஒவ் வொரு வகுப்புக்கும் தனி வாட்ஸ் ஆப் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் பாடங்கள், அது தொடர்பான வீடியோக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதைப் பார்த்தும், படித்தும் மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு செல்போன் அல்லது வாட்ஸ் ஆப் வழியாக ஆசிரியர்கள் பதில் அளிக்கின்றனர்.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஜீவா கூறியதாவது:

இப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கல்வி கற்பிக்கப்படுகிறது.

17 ஆசிரியர்கள் உள்ளனர். 1 முதல் 4-ம் வகுப்பு வரை எளிய செயல்வழிக் கற்றல் முறையிலும், 5-ம் வகுப்பில் எளிய படைப்பாற்றல் முறையிலும் கல்வி கற்பிக்கப்படுகிறது. குழந்தைகளின் தனித் திறமைகளை கண்டறிந்து ஆசிரியர்கள் ஊக்குவிக்கின்றனர்.

வாசிப்புத் திறனை மேம்படுத்தப் புத்தகப் பூங்கொத்து, வகுப்பறை நூலகம் உள்ளது. குழந்தைகள் கணினி அறிவைப் பெறவும், கணினிவழிக் கற்பித்தலுக்கும் 17 கணினிகளைக் கொண்ட விசால மான கணினி அறை உள்ளது. கணினி வழியே ஆன்லைன் தேர்வு எழுதவும் பயிற்சி அளிக்கப் படுகிறது. இசை, யோகா, கராத்தே, சிலம்பம் போன்ற கலைகள் கற்றுத் தரப்படுகின்றன.

குழந்தைகளை நல்லொழுக்கம் நிரம்பிய குடிமக்களாக மாற்று வதே இந்தப் பள்ளியின் முதன்மை நோக்கமாகும். அதன் அடிப்படையில் 'ஒழுக்கம், கல்வி, உயர்வு' என்ற இலச்சினை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயல்பாடுகளால் குழந்தைகள் சிறந்த ஒழுக்கத்துடனும், முழு ஆளுமைத் திறனுடனும் சமு தாயத்துக்கு ஏற்ற குடிமக்களாக உருவாக்கப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x