பிரதமரின் கிசான் திட்டத்தின் உண்மையான பயனாளியிடம் ரூ.4,000 பிடித்தம்

செல்வகணபதி
செல்வகணபதி
Updated on
1 min read

விவசாயிகளுக்கான பிரதமரின் கிசான் திட்டத்தில் திருவாரூர் மாவட் டத்தில் விவசாயிகள் அல்லாதோர் 2,383 பேர் முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந் தது. இவர்களின் வங்கிக் கணக் கில் இருந்து இதுவரை ரூ.20 லட்சத்து 2 ஆயிரம் திரும்பப் பெறப் பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தற்காலிக பணியாளர்கள் 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பிரதமரின் கிசான் திட்டத்தின் உண்மையான பயனாளிகளின் வங்கிக் கணக்கில் இருந்தும் பணம் பிடித்தம் செய்யப் பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

திருவாரூரை அடுத்த அலிவலம் பகுதியைச் சேர்ந்த செல்வகணபதி என்ற விவசாயியின் வங்கிக் கணக்கில் இருந்து பிரதமர் கிசான் திட்டத்தில் இருந்து 2 தவணையாக விடுவிக்கப்பட்ட ரூ.4 ஆயிரம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட விவசாயி செல்வகணபதி கூறிய தாவது: பிரதமரின் கிசான் திட்டத் தில் கடந்த மே மாதம் விண்ணப்பம் செய்தேன். அதைத்தொடர்ந்து, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங் களில் தலா ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.4 ஆயிரம் எனது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப் பட்டது. இந்நிலையில், கடந்த 7-ம் தேதி அன்று என் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.4 ஆயிரம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வங்கி நிர்வாகத்தை அணுகி கேட்டபோது, பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடாக பெறப்பட்ட பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.

எனக்கு சொந்தமாக ஒன்றரை ஏக்கர் நிலம் உள்ளது. பிரதமரின் கிசான் திட்டத்தில் இணைந்து பயன்பெறுவதற்கு உரிய அனைத்து தகுதிகளும் இருந்தும் போலி பயனாளிகளை நீக்குவதாகக் கூறி என் பெயரையும் நீக்கி உள்ளனர். இதுகுறித்து வங்கி நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும். இதேபோல, உண்மையான விவசாயிகளின் கணக்குகளிலும் பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண் டும் என்றார்.

இதுகுறித்து வங்கி நிர்வாகத்திடம் விசாரித்தபோது, ‘‘மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வரப்பெற்ற பட்டியல் அடிப்படையில் பணம் பிடித்தம் செய்யப்பட்டதாக தெரிவித் துள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேட்டபோது, உண்மையான விவசாயிகளின் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டால் உடனடியாக அதை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in