Published : 24 Sep 2015 08:50 AM
Last Updated : 24 Sep 2015 08:50 AM

டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலியாகியும் ஆவடியில் தொடரும் சுகாதார சீர்கேடு: பொதுமக்கள் குற்றச்சாட்டு

ஆவடியில் டெங்கு காய்ச்சலால் 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிறகும் ஆவடி பகுதிகளில் சுகாதார சீர்கேடு தொடர்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். மாநில அமைச் சரின் தொகுதியிலேயே இந்த நிலை நீடிப்பதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சென்னைக்கு அருகே உள்ள ஆவடி பெருநகராட்சி 48 வார்டு களைக் கொண்டது. இங்கு 3.44 லட்சம் பேர் வசிக்கின்றனர். ஆவடி நகராட்சி பகுதிகளில் 5 ஆண்டு களுக்கும் மேலாக நத்தை வேகத் தில் பாதாளச் சாக்கடை பணி நடந்து வருகிறது. இதனால், பெரும் பாலான தெருக்களில் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்ததாவது: சென்னைக்கு அருகே உள்ள ஆவடியில் நாளுக்கு நாள் வீடுகள், வர்த்தகம் மற்றும் கல்வி நிறுவனங்கள் பெருகி வரு கின்றன. ஆனால், அதற்கேற்ற வகையில் சாலை, குடிநீர் உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை.

ராமலிங்கபுரம், கவுரிப் பேட்டை, பக்தவச்சலபுரம், காமராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் போதிய மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதிகள் இல்லை. இதனால் கழிவுநீர் சாலைகளில் தேங்கி நிற்பது நிரந்தரமாகிவிட்டது. கனரக வாகன தொழிற்சாலை உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனப் பகுதிகளிலிருந்து மழைநீர் வெளியேறி பருத்திப்பட்டு ஏரியில் கலக்கும் வகையில் உள்ள 6 கி.மீ., தூரத்துக்கு மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. அது தற்போது கழிவுநீர் கால்வாயாக உருமாறிவிட்டது.

இந்நிலையில், டெங்கு காய்ச்ச லால் 15 வயது சிறுவன் உயிரிழந்த நிலையிலும், சுகாதார பணி களை மேற்கொள்வதில் நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுகிறது.

கொசு மருந்து தெளிப்பது, குப்பைகளை அகற்றுவது, கழிவுநீர் கால்வாயினை தூர்வாருவது உள்ளிட்ட பணிகள் மற்றும் டெங்கு விழிப்புணர்வு பணிகள் எதுவும் நடைபெறவில்லை. மேலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அப்துல்ரஹீமின் தொகு தியிலேயே இந்த அவல நிலை தொடர்வது வேதனையளிக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘காமராஜர் நகர், கோவர்த்தன கிரி, ராமலிங்கபுரம், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட நகராட்சி பகுதிகளில் டெங் குவை தடுப்பதற்காக தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுகாதாரப் பணிகள் மற்றும் டெங்கு விழிப்புணர்வு பணிகளில் 900 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நகராட்சி பகுதிகளில் பெரும் பாலான பகுதிகளில் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. தனி யாருக்கு சொந்தமான காலிமனைக ளில் தேங்கியுள்ள குப்பைகள் துரிதமாக அக்கற்றப்படும்.

மழைநீர் கால்வாய்களில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்று வதற்காக 70 பேர் கொண்ட துப்புரவு பணியாளர் குழுவை அமைத் துள்ளோம். அக்குழுவினர் 10 நாட்க ளில் மழைநீ கால்வாய்களில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்று வார்கள்’ என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x