

தற்கொலை செய்துகொண்ட டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் சொந்த ஊரான கடலூர் அருகே உள்ள கோண்டூரில் அவரது பெற்றோ ருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் ஆறுதல் கூறினார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங் கோடு டிஎஸ்பியாக பணியாற்றிய விஷ்ணுபிரியா, கடந்த 18-ம் தேதி முகாம் அலுவலக குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் சொந்த ஊரான கடலூர் அருகில் உள்ள கோண்டூ ரில் அடக்கம் செய்யப்பட்டது. இந் நிலையில், கடலூர் கோண்டூரில் வசித்து வரும் விஷ்ணுபிரியாவின் பெற்றோரை மதிமுக பொதுச்செய லாளர் வைகோ நேற்று முன்தினம் இரவு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், செய்தியாளர் களிடம் வைகோ கூறியதாவது:
திருச்செங்கோட்டில் விஷ்ணுபிரியா பணியாற்றிய காலத்தில் மாணவர் கோகுல்ராஜ், நூற்பாலை அதிபர் ஜெகநாதன் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்குகளை விஷ்ணுபிரியா விசாரித்து வந்தார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் என்பவர் சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்தும், சம்பந்தமில்லாத 2 பேரை குண்டர் தடுப்பு காவலில் கைது செய்ய அவருக்கு நிர்பந்தம் வந்துள்ளது. அதேபோல, ஜெகநாதன் கொலை வழக்கில் பேருந்து அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த 2 வழக்குகளிலும் உண்மை குற்றவாளிகள் வெளியில் தெரியக் கூடாது என்ற காரணத்துக்காகவே விஷ்ணுபிரியாவுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டிருக்கலாம்.
விஷ்ணுபிரியா மரணத்துக்கு தமிழக முதல்வர் வருத்தம் தெரிவிக் காதது வருத்தம் அளிக்கிறது. இந்த வழக்கில் எஸ்பி செந்தில் குமாரை பணியிடை நீக்கம் செய்ய வில்லை. குறைந்தபட்சம் இடமாற் றம்கூட செய்யவில்லை. எனவே, வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க கோருகிறோம். அப்போதுதான் அவர் தற்கொலை செய்து கொண் டாரா? கொலை செய்யப்பட்டாரா என்ற விவரமும், அவர்தான் கடிதங் களை எழுதினாரா என்பதும் தெரியவரும்.
காவல்துறையில் நடைபெறும் ஊழல், அக்கிரமங்களை வெளிப் படுத்திய கீழக்கரை டிஎஸ்பி மகேஸ்வரிக்கு ஏதாவது இடையூறு செய்ய முற்பட்டால் அதனை நாடு தழுவிய பிரச்சினையாக கொண்டு செல்வோம். விஷ்ணுபிரியா தொடர் பான ஆவணங்கள், மடிக்கணினி, செல்பேசி, கடிதம் உள்ளிட்ட அனைத்தும் போலீஸார் வசமே உள்ளது. அவற்றை அவர்கள் மூடி சீலிட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.