

தமிழக முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சியால்தான் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் வட்டி மானியத் திட்டத்தை மத்திய அரசு நீட்டித்தது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.
சட்டப்பேரவையில் நேற்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர் வோர் பாதுகாப்புத்துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்தில் மார்க்சிஸ்ட் உறுப்பினர் பி.டில்லி பாபு பேசும்போது, “விவசாயி களுக்கான பயிர்க்கடன் வட்டி மானியத் திட்டம் தொடர்ந்து நீடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும்” என்று கேட்டுக்கொண்டார்.
அதற்குப் பதிலளித்த கூட்டுற வுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, “முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சியால்தான் வட்டி மானியத் திட்டத்தை 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த பிரச்சினை தொடர்பாக முதன்முத லாக பிரதமருக்கு கடிதம் எழுதியது தமிழக முதல்வர்தான். அவரது நடவடிக்கையால் தமிழக விவ சாயிகள் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயன்பெற்றுள்ளனர்” என்றார்.
கூட்டுறவு சங்க பணியாளர் களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பான கேள்விக்கு பதிலளிக் கும்போது, டாக்டர் இன்பசாகரன் தலைமையில் இதற்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக வும், அந்த கமிட்டி பணியாளர் களுக்கான ஓய்வூதியம், நிதி நிலைமை குறித்து ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.