Published : 12 Sep 2020 06:52 PM
Last Updated : 12 Sep 2020 06:52 PM

செப்.12 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 12) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 4,97,066 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 3,260 2,962 261 37
2 செங்கல்பட்டு 30,065

27,583

2,007 475
3 சென்னை 1,47,591 1,33,987 10,645 2,959
4 கோயம்புத்தூர் 21,665 17,754 3,562 349
5 கடலூர் 16,023 12,717 3,136 170
6 தருமபுரி 1,987 1,293 675 19
7 திண்டுக்கல் 7,796 6,856 791 149
8 ஈரோடு 4,409 3,347 1,006 56
9 கள்ளக்குறிச்சி 7,761 6,772 902 87
10 காஞ்சிபுரம் 19,235 17,718 1,230 287
11 கன்னியாகுமரி 10,847 9,896 745 206
12 கரூர் 2,127 1,705 391 31
13 கிருஷ்ணகிரி 3,107 2,255 808 44
14 மதுரை 15,238 13,959 908 371
15 நாகப்பட்டினம் 3,919 2,775 1,077 67
16 நாமக்கல் 3,210 2,332 828 50
17 நீலகிரி 2,279 1,753 509 17
18 பெரம்பலூர் 1,521 1,405 97 19
19 புதுகோட்டை 7,293 6,399 776 118
20 ராமநாதபுரம் 5,165 4,751 301 113
21 ராணிப்பேட்டை 11,952 11,159 650 143
22 சேலம் 14,180 12,042 1,920 218
23 சிவகங்கை 4,475 4,140 221 114
24 தென்காசி 6,224 5,502 606 116
25 தஞ்சாவூர் 8,192 7,249 815 128
26 தேனி 13,685 12,747 781 157
27 திருப்பத்தூர் 3,631 3,073 485 73
28 திருவள்ளூர் 28,025 25,574 1,981 470
29 திருவண்ணாமலை 12,878 11,118 1,568 192
30 திருவாரூர் 5,123 4,308 751 64
31 தூத்துக்குடி 12,251 11,438 694 119
32 திருநெல்வேலி 11,017 9,724 1,100 193
33 திருப்பூர் 4,446 2,833 1,529 84
34 திருச்சி 8,753 7,722 899 132
35 வேலூர் 12,543 11,280 1,071 192
36 விழுப்புரம் 9,312 8,342 885 85
37 விருதுநகர் 13,647 13,028 417 202
38 விமான நிலையத்தில் தனிமை 922 905 16 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 884 820 64 0
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0
மொத்த எண்ணிக்கை 4,97,066 4,41,649 47,110 8,307

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x