பிரதமரின் வீடு கட்டித்தரும் திட்டத்திலும் முறைகேடு; உரிய விசாரணை நடத்துக; தினகரன்

டிடிவி தினகரன்: கோப்புப்படம்
டிடிவி தினகரன்: கோப்புப்படம்
Updated on
1 min read

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்துவதையும், அதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதையும் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் தாமதமின்றி உறுதி செய்ய வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (செப். 12) தன் ட்விட்டர் பக்கத்தில், "பிரதமரின் வேளாண்மை நிதி உதவி திட்டத்தைப் போல பிரதமரின் வீடு கட்டித்தரும் திட்டத்திலும் (Pradhan Mantri Awas Yojana) தமிழகத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக அடுத்தடுத்து செய்திகளாக வெளிவருகின்றன.

உயிரோடு இருப்பவர்களின் பெயரில் அவர்களுக்கே தெரியாமல் வீடு கட்டிக் கொடுத்ததாக பணம் கையாடல் செய்ததாக மட்டுமின்றி, இறந்தவர்களின் பெயராலும் இந்த மோசடி நிகழ்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

ஏழை, எளிய மக்களின் நலனுக்கான இத்தகைய திட்டங்களில் மனசாட்சியின்றி செய்யப்பட்டுள்ள முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்துவதையும், அதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதையும் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் தாமதமின்றி உறுதி செய்ய வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in