தாம்பரம் பகுதியில் பரவுகிறது டெங்கு காய்ச்சல்: குழந்தைகள் அதிகம் பாதிப்பு; தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை

தாம்பரம் பகுதியில் பரவுகிறது டெங்கு காய்ச்சல்: குழந்தைகள் அதிகம் பாதிப்பு; தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை
Updated on
1 min read

சென்னை அடுத்த தாம்பரம் பகுதி யில் டெங்கு காய்ச்சலால் குழந்தை கள் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழகத்தில் மீண்டும் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்தது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப் பட்டனர்.

கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டும் இந்தியாவிலேயே அதிகமாக தமிழகத்தில் 1,012 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அதன்பின் ஓரளவு கட்டுக்குள் இருந்த டெங்கு காய்ச்சல், கடந்த மாதம் மீண்டும் தீவிரமடையத் தொடங்கியது. கடந்த மாதம் 6-ம் தேதி சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஆனந்த்குமார் - கற்பகம் தம்பதி யரின் 8 வயது மகள் டெங்கு காய்ச்சலால் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் சென்னை புறநகரின் முக்கியப் பகுதியான தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரியவர்களைவிட குழந்தை கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தாம்பரம், குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெங்கு காய்ச்சல் நோயாளி களுக்கு தனி வார்டில் கொசு வலை கட்டித்தான் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை தெரிவித் துள்ளது.

ஆனால் தனியார் மருத்துவ மனைகளில் மற்ற நோயாளிகளுக்கு அருகிலேயே டெங்கு காய்ச்சல் நோயாளிகளையும் படுக்க வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் மற்றவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in