

பாமக தலைவர் ஜி.கே.மணி நேற்று வெளியிட்ட அறிக்கை:
பாமக சார்பில் வரும் 13-ம் தேதி (நாளை) தொடங்கி 19-ம் தேதி வரை சமூகநீதி வாரம் கடைபிடிக்கப்பட உள்ளது.1987-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு வார தொடர் சாலைமறியல் போராட்டத்தில் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட இடஒதுக்கீட்டு போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையிலும், சமூகநீதி குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் சமூகநீதி வாரம் கடைபிடிக்கப்படுகிறது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ஆகியோர் சமூகநீதி வாரத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கின்றனர்.
செப்டம்பர் 17-ம் தேதி வீரவணக்க நிகழ்ச்சியை தொடர்ந்து ராமதாஸ் எழுதிய, ‘சுக்கா. மிளகா, சமூகநீதி?’ என்ற நூல் வெளியிடப்படும். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பதிவு செய்து கொள்ள விரும்புபவர்கள் www.pmkofficial.com/SJW2020Register என்ற இணைப்பில் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.