மனித உரிமை கவுன்சிலில்அமெரிக்க தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

மனித உரிமை கவுன்சிலில்அமெரிக்க தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்
Updated on
1 min read

ஜெனிவா மனித உரிமை கவுன்சிலில் இலங்கை தமிழர்கள் தொடர்பான அமெரிக்க தீர்மானத்துக்கு எதிராக மத்திய அரசு வாக்களிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீது தாக்குதல் நடத்திய சிங்களப் பேரினவாத அரசாங்கத்தையும், அதை நடத்திய ராஜபக்ச உள்ளிட்ட சிங்கள ராணுவத்தினரையும் அனைத்துலக நீதிமன்றக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்ட அனைத்துக் கொடுமைகளையும் முழுமையாக ஆராய்ந்து அறிய பன்னாட்டு விசாரணைக் குழுவை அமைக்கும் விதத்தில், ஜெனீவா மனித உரிமைக் கவுன்சிலின் 30–வது அமர்வுக் கூட்டத்தில் உறுப்பு நாடுகள் தீர்மானம் கொண்டுவர வேண்டும். சிங்கள அரசை பாதுகாக்கும் குறிக்கோளுடன் அமெரிக்க உள்ளிட்ட எந்த நாடு தீர்மானம் கொண்டுவந்தாலும் அதை தோற்கடிக்க வேண்டும்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 16-ம் தேதியன்று நிறைவேற்றிய தீர்மானத்தை இந்திய அரசு அங்கீகரித்து, அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்'' என்று வைகோ கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in