புரிந்துணர்வு ஒப்பந்த அறிக்கையை பேரவையில் தாக்கல் செய்ய ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை

புரிந்துணர்வு ஒப்பந்த அறிக்கையை பேரவையில் தாக்கல் செய்ய ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை
Updated on
1 min read

சென்னையில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்த அறிக் கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

புதுக்கோட்டையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பன்னாட்டு மூல தனமும், கார்ப்பரேட் நிறுவனங் களின் வரவும் நமது நாட்டுக்குத் தேவைதான். அதே நேரத்தில் அவை வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக இருக்க வேண்டும். குறைந்த முதலீட் டில் அரசு வழங்கும் சலுகை களை அனுபவித்த பின்னர் நிறுவனத்தை மூடிவிட்டு, தொழிலாளர்களை நடுத்தெரு வில் நிறுத்தும் நிறுவனங்கள் நமக்குத் தேவையில்லை.

முதலீட்டாளர்கள் மாநாட் டில் போடப்பட்டுள்ள புரிந்து ணர்வு ஒப்பந்தங்கள் குறித்த அறிக்கையை சட்டப்பேரவை யில் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். மதுவிலக்கு குறித்து நடப்பு பேரவைக் கூட்டத்திலேயே விவாதித்து, அதன்படி செயல்படுத்த வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in