இலங்கை கடற்படையினரால் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 6 பேர் நடுக்கடலில் கைது: 2 படகுகளும் பறிமுதல்

இலங்கை கடற்படையினரால் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 6 பேர் நடுக்கடலில் கைது: 2 படகுகளும் பறிமுதல்
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் ஜெக தாப்பட்டினம் பகுதி மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர்.

ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து 168 விசைப் படகுகளில் மீனவர்கள் சுமார் 700 பேர் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

கடலில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர், பரந்தாமன்(55), ப.ரமேஷ்(28), மணிவண்ணன்(40), சிவராஜ்(35), புஷ்பராஜ்(40), சிவா(40) ஆகிய 6 மீனவர்களை கைது செய்தனர்.

மேலும், அவர்களது 2 படகுகளையும் பறிமுதல் செய்து, இலங்கையில் உள்ள காங்கேசன் துறை கடற்படை தளத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in