

சென்னை உள்ளிட்ட மாநகராட்சி களில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் ஒழுங்காக செயல்படுத் தப்படவில்லை என்று சட்டப் பேரவையில் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்டு உறுப்பினர் குற்றம் சாட்டினார்.
சட்டப் பேரவையில் நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற் றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் உறுப்பினர் ஏ.லாசர் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியிலும் சரி, புதிதாக தோற்றுவிக்கப்பட்ட திண்டுக்கல், வேலூர் உள்ளிட்ட மாநகராட்சிகளிலும் சரி குப்பைக் கூளங்கள் சரியாக அப்புறப்படுத் தப்படுவது கிடையாது. ஆங் காங்கே தேங்கிக்கிடக்கின்றன. குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியே பிரித்தெடுத்து சேகரிக்க வேண் டும். மாநகராட்சிப் பகுதிகளில் திடக் கழிவு மேலாண்மைத் திட்டம் ஒழுங் காக செயல்படுத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.
அதற்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் அளிக்கையில் கூறியதாவது:
கிராமப் புறங்களில் தாய் திட்டம், பசுமை வீடுகள் திட்டம் உட்பட எண்ணற்ற திட்டங்களும் அதேபோல் நகர்ப்புற பகுதிகளிலும் நிறைய திட்டங்களும் இந்த அர சால் செயல்படுத்தப்பட்டு வருகின் றன. திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு முந்தைய திமுக ஆட்சியைக் காட்டிலும் அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அமைச்சர் வேலு மணி கூறினார்.
தொடர்ந்து பேசிய மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர் கே.பாலபாரதி, “கடந்த திமுக ஆட்சியிலும், சரி இப்போதைய ஆட்சியிலும் சரி, திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கென நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், திட்டங்கள் செயல்படுத் தப்படுவது இல்லை. இரு ஆட்சி யிலும் ஒரே நிலைதான்” என்றார்.
உறுப்பினர் லாசர் தொடர்ந்து பேசும்போது, “ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் துப்புர வுப் பணியாளர்களின் எண் ணிக்கை மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிட்டது. துப்புரவுப் பணி யாளர்களை ஒப்பந்த அடிப்படை யில் நியமிக்கும் முறையை ரத்து செய்துவிட்டு அவர்களை நிரந்தரமாக பணியமர்த்த வேண் டும்” என்று குறிப்பிட்டார்.
அதற்குப் பதில் அளித்த அமைச்சர் வேலுமணி, “உள் ளாட்சி அமைப்புகளில் தேவை யான அளவுக்கு துப்புரவுப் பணியாளர்கள் இருக்கிறார்கள். புதிதாக 16,492 துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்” என்றார்.