மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஸ்ரீரங்கத்தில் காத்திருப்புப் போராட்டம்

ஸ்ரீரங்கத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.
ஸ்ரீரங்கத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.
Updated on
1 min read

ஸ்ரீரங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று (செப். 11) காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

"திருச்சி திருவானைக்காவல் டிரங்க் ரோடு களஞ்சியம் பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு மின்சாரம், குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை உடனே நிறைவேற்றித் தர வேண்டும்" என்று வலியுறுத்தி மாநகராட்சி கோட்ட அலுவலகம் முன் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஸ்ரீரங்கம் பகுதிச் செயலாளர் தர்மா தலைமை வகித்தார். கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா போராட்டத்தைத் தொடக்கிவைத்தார். மாவட்டக் குழு உறுப்பினர் வீரமுத்து, பகுதிக் குழு உறுப்பினர்கள் மற்றும் களஞ்சியம் பகுதி மக்கள் பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட உதவி ஆணையர் திருஞானம் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், அடிப்படை தேவைகளை நிறைவேற்றித் தர அலுவலர்கள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, மக்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டு கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in