Last Updated : 11 Sep, 2020 04:55 PM

 

Published : 11 Sep 2020 04:55 PM
Last Updated : 11 Sep 2020 04:55 PM

குமரியில் 55 அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் விரைவில் தொடங்கப்படும்: ரூ.101 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் விரைவில் 55 அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் டொடங்கப்படும் என நாகர்கோவிலில் ரூ.101.50 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நடைபெற்ற விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் கூட்டுறவு துறை சார்ந்தநலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

அப்போது கூட்டுறவு துறையின் சார்பில் 9 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகளை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்.

மேலும் பயிர்க் கடனாக 11,351 விவசாயிகளுக்கு ரூ.6,957 லட்சமும், 988 பெண்களுக்கு மகளிர் சுயஉதவி குழு கடனாக ரூ.862 லட்சமும், 800 பேருக்கு கோவிட் 19 கடனுதவியாக ரூ.40 லட்சமும், 520 பயனாளிகளுக்கு சிறு வணிக கடனாக ரூ.178 லட்சமும், 409 பயனாளிகளுக்கு மத்திய கால கடனாக ரூ.380 லட்சமும், 21 மாற்று திறனாளிகளுக்கு ரூ.11 லட்சம் உட்பட மொத்தம் 15,039 பேருக்கு ரூ.101.50 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், "ஊரடங்கு நேரத்தில் ஏழை, மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் தமிழகம் முழுவதும் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்டது. மேலும் ஏப்ரல் முதல் ஜீலை வரையிலான ஊரடங்கு காலத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணை ஆகியவையும் விலையில்லாமல் வழங்கப்பட்டது.

கரோனா காலத்தில் தமிழகம் முழுவதும் இயங்கி வரும் நடமாடும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள், மற்றும் ஏற்கெனவே செயல்பட்டு வரும் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் 6671.81 மெட்ரிக் டன் காய்கறிகள் ரூ.18.04 கோடி மதிப்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களை பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு அருகிலேயே விநியோகிக்கும் பொருட்டு மாநிலம் முழுவதும் ரூ.9.66 கோடி மதிப்பில் 3,501 அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் விரைவில் துவங்கப்படவுள்ளது.

இதில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 55 கடைகளும் விரைவில் தொடங்கப்படும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x