அமைச்சர்கள் சுடச்சுட பதில் சொல்வது ஏன்? - துரைமுருகனுக்கு அமைச்சர் வளர்மதி பதில்

அமைச்சர்கள் சுடச்சுட பதில் சொல்வது ஏன்? - துரைமுருகனுக்கு அமைச்சர் வளர்மதி பதில்
Updated on
1 min read

அமைச்சர்களின் பதில் உரையை கேட்காமல் திமுக உறுப்பினர்கள் வெளியே சென்று விடுவதால் அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர்கள் சுடச்சுட பதில் சொல்ல வேண்டியிருப்பதாக சமூக நலத்துறை அமைச்சர் பி.வளர்மதி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று செய்தி, விளம்பரம், வருவாய்த் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தை தொடங்கி வைத்து திமுக உறுப்பினர் கோவி.செழியன் பேசினார். அவரது கேள்விகள், குற்றச்சாட்டு களுக்கு வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உடனுக்குடன் எழுந்து பதிலளித்து வந்தார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக சட்டப்பேரவைக் குழு துணைத் தலைவர் துரைமுருகன், ‘‘உறுப்பினர்கள் தவறான தகவல் களை கூறினால் அமைச்சர்கள் அதை குறித்து வைத்துக்கொண்டு இறுதியாக பதில் உரையின்போது விளக்கம் அளிக்கலாம். உறுப் பினர்கள் பேசிக் கொண்டிருக் கும்போது வரிக்குவரி பதிலளித் துக் கொண்டிருந்தால் அவரால் தொடர்ந்து பேச முடியாது. அவருக்கான நேரமும் குறைந்துவிடும்’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட சமூக நலத்துறை அமைச்சர் பி.வளர்மதி, ‘‘அமைச்சர்களின் பதில் உரையை கேட்க திமுக உறுப்பினர்கள் அவையில் இருப்பதில்லை. அதனால்தான் திமுக உறுப்பினர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே குறுக் கிட்டு அமைச்சர்கள் சுடச்சுட பதில் சொல்ல வேண்டியிருக்கிறது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in