

நிலம் கையகப்படுத்துதல் சட் டத்தை எதிர்த்து, நாடாளுமன்றம் எதிரே 5 நாட்கள் தொடர் போராட்டம் நடைபெறவுள்ளது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பு அகில இந்திய விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் அதுல் குமார் அஞ்சான்.
அவர் தஞ்சையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது: கடந்த பிப்ரவரி மாதம் பல்லாயிரக்கணக்கான விவசாயி கள் நாடாளுமன்றத்தை முற்றுகை யிட்டதால், நிலம் கையகப்படுத் துதல் அவசர சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றாமல் உள்ளது. பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தவுடன், சட்டத்தை நிறை வேற்ற மத்திய அரசு முயற்சிக்கும்.
விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று மக்களவைத் தேர்தலுக்கு முன்பு மோடி வாக்குறுதி அளித் தார். ஆனால், இன்று வரை எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்ற வில்லை. இதனால், விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பயிர் விளைச்சல் இல்லை, பாசனத்துக்கு தண்ணீர் இல்லை, கட்டுப்படியான விலை கிடைக்க வில்லை, கடனை அடைக்க முடிய வில்லை என்பதுதான் தற்போது விவசாயிகளின் நிலை.
நிலம் கையகப்படுத்துதல் மசோதாவைக் கைவிடுதல், விவ சாயத் தொழிலாளர்கள், கைவினை ஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்குதல், கட்டாய பயிர்க் காப்பீடு, விவசாயக் கடன் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, வரும் நவம் பரில் நாடாளுமன்றம் முன்பு 5 நாட்கள் தொடர்ந்து தர்ணா போராட்டம் நடத்தப்படும். இதில், நாடு முழுவதும் இருந்து 60 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்பர்.
மக்களின் நிலங்களில் அரசு கைவைக்க அனுமதிக்க மாட் டோம். கர்நாடக அரசு தமிழகத் துக்கு உரிய நீரை காவிரியில் திறந்து விடவேண்டும். காவிரி டெல்டாவில் விவசாயத்தை அழிக் கும் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண் டும் என்று கேட்டுக் கொண்டார்..