Last Updated : 10 Sep, 2020 05:42 PM

 

Published : 10 Sep 2020 05:42 PM
Last Updated : 10 Sep 2020 05:42 PM

கீழடி 6-ம் கட்ட அகழாய்வுப் பணி: தொல்லியல்துறை ஆணையர் உதயச்சந்திரன் ஆய்வு 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி 6-ம் கட்ட அகழாய்வு பணியை தொல்லியல்துறை ஆணையர் உதயச்சந்திரன் ஆய்வு செய்தார்.

திருப்புவனம் அருகே கீழடியில் 110 ஏக்கரில் தொல்லியல் மேடு அமைந்துள்ளது. இங்கு 2014-ம் ஆண்டு முதல் அகழாய்வு பணி நடந்து வருகிறது. ஏற்கெனவே மூன்று கட்ட அகழாய்வை மத்திய தொல்லியல்துறையும், 4 மற்றும் 5-ம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல்துறையும் நடத்தின.
தற்போது 6-ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது.

இதுவரை 6-ம் கட்ட அகழாய்வில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அகழாய்வு பணி செப்.30-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் இன்று கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய 4 இடங்களில் நடக்கும் அகழாய்வு பணிகளை தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன் பார்வையிட்டார்.

கொந்தகையில் முதுமக்கள்தாழி, மனித எலும்புகளை பார்வையிட்டு விபரங்களை கேட்டறிந்தார். அகழாய்வு பணிகளின் நிலை குறித்து இணை இயக்குநர் சிவானந்தம் விளக்கினார்.

தொடர்ந்து கொந்தகையில் நடந்து வரும் கீழடி அகழ் வைப்பகம் அமைக்கும் பணியையும் இயக்குநர் பார்வையிட்டர். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினர்.

கீழடி அகழ் வைப்பகம் அமைக்கும் பணி தொடக்கம்:

கீழடி அகழ் வைப்பகம் அமைக்கும் பணி தொடங்கியது.

இதுவரை செங்கல் கட்டுமானம், மனித எலும்புகள், விலங்கு எலும்புகள், பானைகள், ஓடுகள், பாசிகள் என 14,535 தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. இந்த அகழாய்வு மூலம் கீழடி நகர நாகரீகம் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெரியவந்தது.

இதையடுத்து தொல்பொருட்களை பொதுமக்கள், மாணவர்கள் காணும் வகையில் கீழடி அருகே கொந்தகையில் 2 ஏக்கரில் உலகத்தரம் வாய்ந்த அகழ் வைப்பகம் அமைக்க ரூ.12.21 கோடி ஒதுக்கப்பட்டது.

திருப்புவனம் அருகே கொந்தகையில் கீழடி அகழ் வைப்பகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இப்பணியை ஜூலை 20-ம் தேதி முதல்வர் பழனிசாமி கானொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தற்போது கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x