Published : 04 Sep 2015 08:37 AM
Last Updated : 04 Sep 2015 08:37 AM

43 உபசன்னதிகள், 11 கோபுரங்களுக்கு நடைபெறவுள்ள முதல் கட்ட கும்பாபிஷேகத்துக்கு ஸ்ரீரங்கம் கோயிலில் ஏற்பாடுகள் தீவிரம்: 7-ம் தேதி இரவு யாகசாலை பிரவேசம்

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் முதல் கட்ட கும்பாபி ஷேகம் இம்மாதம் 9-ம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பூலோக வைகுண்டம் என்றும், 108 திவ்ய தேசங்களில் முதன் மையானது என்றும் சிறப்பு பெற்றது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். 156 ஏக்கர் பரப்பளவில் 7 பிர காரங்கள், 21 கோபுரங்கள் மற்றும் 9 தீர்த்தங்கள் ஆகியவற் றைக் கொண்டு பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, ரூ.18 கோடியில் திருப்பணி வேலைகள் மேற்கொள் ளப்பட்டன. பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன.

முதல் கட்டமாக...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஏராளமான சன்னதிகள் உள்ளதால் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்துவதில் நடைமுறைச் சிக் கல்கள் இருப்பதால் இரு கட்டங்களாக நடத்த அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது.

இதைத்தொடர்ந்து கடந்த மாத இறுதியில் உப சன்னதிகளுக்கு பாலாலயம் செய்விக்கப்பட்டது. முதல் கட்டமாக கூரத்தாழ்வார், நாதமுனிகள், வேணுகோபாலன், பட்டாபிராமன், கம்பத்தடி ஆஞ்ச நேயர், கீழ பட்டாபிராமன், சரஸ்வதி, ஹயக்கிரீவர் சன்னதி உட்பட 43 உப சன்னதிகள், கோயிலின் உள்ளே இடம் பெற்றுள்ள 11 கோபுரங்கள் ஆகிய வற்றுக்கு செப்டம்பர் 9-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற வுள்ளது.

இதையொட்டி கோபுரங்களில் சாரம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. கோயிலின் உள்ளே உள்ள ஆயிரங்கால் மண்ட பத்தில் யாகசாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. யாகசாலையில் அலங்காரங்கள் செய்தல், வண் ணம் பூசுதல், பக்தர்கள் வரிசையாக செல்ல தடுப்புகள் அமைத்தல், கோபுரங்களுக்கு வண்ண மின் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதல் கட்ட கும்பாபிஷேகத்துக் காக பிரம்மாண்டமான அளவில் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இம்மாதம் 7-ம் தேதி மாலை முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கி, 4 கால யாக பூஜைகள் நடத்தப்படவுள்ளன.

7-ம் தேதி இரவு 7.30 மணிக்கு யாகசாலை பிரவேசமும், முதல் கால யாகபூஜையும் நடைபெற உள்ளன.

இதைத்தொடர்ந்து 9-ம் தேதி காலை 6.30 மணிக்கு 43 உப சன்னதிகள் மற்றும் 11 கோபு ரங்களுக்கு கும்பாபிஷேகம் நடை பெறவுள்ளது. இதற்கான ஏற்பாடு களை கோயில் இணை ஆணை யர் பொ.ஜெயராமன், அறங் காவலர் குழுத் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் தலைமையில் கோயில் ஊழியர்கள் மேற்கொண் டுள்ளனர்.

இரண்டாம் கட்டமாக...

இக்கோயிலில் உள்ள ரங்க நாதர், ரங்கநாயகி தாயார் உள்ளிட்ட முக்கிய சன்னதிகள் மற்றும் ராஜகோபுரம், வெள்ளை கோபுரம் உள்ளிட்டவைகளுக்கு இரண்டாம் கட்டமாக கும்பாபிஷேகம் நடத்தப் படவுள்ளது.

அதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என அறநிலையத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x