

சென்னை ஏழுகிணறு, சண்முகராயன் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகர் (43). மென்பொருள் பொறியாளரான இவர், அண்ணா சாலையில் உள்ள தனியார் மென் பொருள் பயிற்சி மையம் ஒன்றில் உதவி மேலாளராக பணிபுரிந்தார். கடந்த சில நாட்களாக அவர் மூச்சுத் திணறல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவுடன் அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அங்கு 8-வது மாடியில் உள்ள ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து வழக்கம் போல் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் அவர் திடீரென மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர்,ஏற்கெனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
வீடியோ பதிவு
தற்கொலை செய் வதற்கு முன்பு பிரபாகர் வெளியிட்ட வீடியோவில், தனது தற்கொலைக்கு அந்த நிறுவனத்தில் மேலா
ளராக பணிபுரியும் செந்தில்தான் காரணம் என தெரிவித்துள்ளார். இதையடுத்து செந்திலிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.