Published : 10 Sep 2020 09:33 AM
Last Updated : 10 Sep 2020 09:33 AM

முதல்வர் நாளை காஞ்சிபுரம் மாவட்டம் வருகை: குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை திறந்து வைக்கிறார்

தமிழக முதல்வர் பழனிசாமி நாளை (செப். 11) காஞ்சிபுரம் வருகிறார். இவர் 2,112 வீடுகளைக் கொண்ட ரூ.190 கோடி மதிப்பிலான குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை திறந்து வைப்பதுடன், பல்வேறு கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

முதலமைச்சர் காஞ்சிபுரம் வருகையின்போது ரூ.190.08 கோடி மதிப்பிலான 2,112 வீடு களைக் கொண்ட குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளை தொடங் குவதுடன், மொத்தம் ரூ.260 கோடியே 46 லட்சத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களையும் திறந்து வைக் கிறார்.

மேலும் ரூ.29 கோடியே 42 லட்சம் செலவிலான கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 15,910 பயனாளிகளுக்கு ரூ.72.03 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

இந்த விழாவில் பங்கேற்கும் அதிகாரிகள், பயனாளிகள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தொற்று உறுதியாகும் நபர்கள் இந்த விழாவில் பங்கேற்க முடியாது.

எனவே, ஒவ்வொரு துறையில் இருந்தும் 2 பேர் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானால் மற்றொரு வர் அந்த துறை சார்பில் கூட்டத் தில் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் ஆய்வு

முதல்வர் வருகையை ஒட்டி பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ், காஞ்சிபுரம் மவாட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா, மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் வாலாஜாபாத் பா.கணேசன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

விழா நடைபெறும் மக்கள் நல்லு றவு மையக் கூடம், பந்தல் அமைக் கும் இடங்கள் ஆகிய இடங்களில் இந்த ஆய்வு நடைபெற்றது. முதல மைச்சர் வருகையை ஒட்டி ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள வேகத் தடைகள் அகற்றப்பட்டு வரு கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x