

தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுகள் கலந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து தமிழக, கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் அதிகளவில் மழை பெய்யும் காலங்களில் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பது வழக்கம். அவ்வாறு கூடுதலாக தண்ணீர் வரும் போது, பெங்களூருவைச் சேர்ந்த தொழிற்சாலை கழிவுகளும், சாக்கடை தண்ணீரும் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசுவதுடன், மாசு ஏற்படுகிறது. இதனால் கெலவரப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி அணைகளில் தேங்கும் தண்ணீரில் துர்நாற்றம் வீசுவதுடன், விளைநிலங்கள் பாதிக் கப்படுவதாக விவசாயிகள் பல ஆண்டுகளாக புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 4-ம் தேதி கெலவரப்பள்ளி அணை யில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அதிகளவில் நுரையுடன் வெளி யேறியது. தென்பெண்ணையாற்று நீர் 5 மாவட்ட மக்களின் விவ சாயம், நிலத்தடி நீர், குடிநீர் உள் ளிட்ட வாழ்வாதாரமாகும். எனவே, தமிழக அரசு கொடி யாளம் அணை பகுதியில் தென் பெண்ணையாற்று நீர் முழு வதையும் சுத்திகரித்து அனுப்பும் வகையில் அதிநவீன சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க வேண்டும் என அரசுக்கு தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தர வின் பேரில், நேற்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச் சூழல் பொறியாளாரும், விஞ் ஞானியுமான செல்வி தலைமை யில் தமிழக மற்றும் கர்நாடக மாநில மாசுக்கட்டுப்பாட்டு அலு வலர்கள் கொண்ட குழுவினர் கெல வரப்பள்ளி அணைமற்றும் தென் பெண்ணை ஆற்றுப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, தென்பெண்ணை ஆற்று நீர் மாசடைவதற்கான காரணம் குறித்தும், இதனால் பொது மக்கள், விவசாயிகளுக்கான பாதிப் புகள் குறித்தும் ஆய்வு செய்தனர். முன்னதாக, கொடியாளம் சிற்றணை, கெலவரப்பள்ளி அணை ஆகிய இடங்களில் பாய்ந்தோடிய தென்பெண்ணையாற்று நீரை ஆய்வுக்காக குழுவினர் சேகரித் தனர். இந்த நீரை ஆய்வு செய்து, முடிவுகளை தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் ஒப்படைக்க உள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர். ஆய்வின் போது ஓசூர் துணை ஆட்சியர் குணசேகரன் உடனிருந்தார்.