கரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் இருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘பிளாஸ்மா வங்கி’ ஏற்படுத்தப்படுமா? - தொற்று அச்சத்தில் பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தொற்று ஏற்பட்டு குணமடைந்த பலர் கரோனா பாதித்தோருக்கு பிளாஸ்மா தானம் வழங்க முன்வரும் செய்தியை அறிந் ததையடுத்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ‘பிளாஸ்மா வங்கி' தொடங்க பொதுமக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவைப் பிரித் தெடுத்து, கரோனா சிகிச்சையில் உள்ளோருக்கு செலுத்த வசதி யாக, சென்னை அரசு மருத்துவ னையில் ‘பிளாஸ்மா வங்கி' தொடங்கப்பட்டுள்ளது.
அதேநேரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் அதிக எண்ணிக் கையில் தொற்று கண்டு குண மடைந்தோர் உள்ள நிலையில், ‘பிளாஸ்மா' தானம் வழங்க பலர் விரும்புகின்றனர். இதற் காக சென்னை சென்று திரும்ப வேண்டிய சூழல் உள்ளதால், பலரும் அதை தவிர்த்து வருகின் றனர். எனவே, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் ‘பிளாஸ்மா வங்கி' தொடங்க கோரிக்கை எழுந் துள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘கரோனா பாதிப்பில் செங்கல்பட்டு மாவட்டம் தமிழகத்திலேயே 2-வது இடத்தில் இருக்கிறது. இங்கு குணமடைந்த பலர் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்துள்ளனர். செங்கல் பட்டில் ‘பிளாஸ்மா வங்கி' இல்லாத தால், சென்னை அரசு மருத்து வமனைக்குச் சென்று, நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
எனவே, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ‘பிளாஸ்மா வங்கி' தொடங்க வசதி ஏற்படுத்த வேண்டும், இங்கு தொடங்கப்படு வதன் மூலம் அருகில் உள்ள மாவட்டங்களான காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற மாவட்ட மக்களும் பயன் பெறுவர்’’ என்றனர்.
இதுகுறித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனை நிர்வாகம் கூறியதாவது: கரோனாவில் இருந்து குணமடைந்தோரின் உடலில் இருந்து எடுக்கப்படும் நோய் எதிரணுக்கள், மற்ற நோயாளி களின் உடலில் செலுத்தப் படும்போது, அவர்கள் உடலில் உள்ள கரோனா வைரஸ் அழிக் கப்படுகிறது.
மேலும் செங்கல்பட்டு மருத் துவமனையில் ‘பிளாஸ்மா வங்கி' தொடங்க போதிய கட்டமைப்பு வசதி உள்ளது. எனவே ‘பிளாஸ்மா வங்கி' அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. விரைவில் அமையும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.
