

பஞ்சமி நிலத்தை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தலித் தலைவர்களை ஒன்றுதிரட்டி போராட்டம் நடத்தப் போவதாக சமூக சமத்துவப் படை நிறுவனர் சிவகாமி தெரிவித்தார்.
மதுராந்தகம் அருகே சரவம் பாக்கம் கிராமத்தில் நேற்று நடை பெற்ற தலித் தலைவர்கள் ஆலோச னைக் கூட்டத்தில், சிறப்பு விருந்தி னராக கலந்துகொண்ட சமூக சமத்து வப் படை நிறுவனர் சிவகாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பஞ்சமி நிலத்தை மீட்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, இனி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதையும் தெளிவு படுத்த வேண்டும். இந்தியாவில் கொண்டுவந்துள்ள நிலச் சீர்திருத் தச் சட்டத்தால் ஏழை மக்களுக்கு எந்தப் பயனுமில்லை. ஒரு சட்டத்தை எவ்வளவு மோசடியாக பயன்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு மோசடியாக இச்சட் டத்தை இந்தியா முழுவதும் பயன் படுத்தி உள்ளனர்.
இந்த நிலச் சீர்திருத்தச் சட்டத் தின் மூலம் ஒரு குடும்பம் 45 ஏக்கர் நிலம் வைத்துக் கொள்ளலாம். ஆங்கிலேயர் காலத்திலேயே ஒரு குடும்பத்தினர் 5 ஏக்கர் நிலம் வைத்து இருக்கலாம் என அவர்கள் அறிவித்திருந்தனர். ஆனால் அந்த சட்டம் மாற்றப்பட்டது ஏமாற்று வேலை.
இப்பகுதியில் நிலத்துக்காக போராடும் தலித் தலைவர்கள் மீது பொய் வழக்கு போடப்படுகிறது. கடந்த 2011-ம் ஆண்டு பஞ்சமி நிலங்களை கையகப்படுத்த முதல் வராக இருந்த கருணாநிதி, நீதிபதி தலைமையில் குழு அமைத்தார். அதற்குப் பிறகு முதல்வராக வந்த ஜெயலலிதா இந்த குழுவில் இருந்த நீதிபதியை அகற்றி அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இக்குழு இதுவரை எந்த பஞ்சமி நிலத்தையும் மீட்க வில்லை. இனியும் தாமதித்தால் தலித் தலைவர்கள் ஒன்றுபட்டு பஞ்சமி நிலத்தை மீட்க போராட்டம் நடத்துவோம் என்றார்.
இந்த ஆலோசனைக் கூட்டத் தில் அம்பேத்கர் புரட்சி புலிகள் நிறுவனர் கிருஷ்ணப் பறையனார், அம்பேத்கர் பேரவை பொதுச் செயலர் அன்புதாசன், அம்பேத்கர் நூற்றாண்டு இயக்கத் தலைவர் இயேசு மரியான் உட்பட பலர் பங்கேற்றனர்.